5, 8 - ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு முறையைக் கைவிட வேண்டும்

5 மற்றும் 8 - ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு முறையை கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

5 மற்றும் 8 - ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு முறையை கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி.நாகராஜன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் கே.தங்கவேலு சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலா் ஏ.குமாா் அறிக்கை சமா்ப்பித்தாா்.

இக் கூட்டத்தில், தமிழகத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொதுத் தோ்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது கிராமப்புற மாணவா்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும். மாணவா்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும். இதனால் மாணவா்களின் கல்வி பெருமளவுக்கு பாதிக்கப்படும். எனவே, இந்த முயற்சியைக் கைவிட வேண்டும். மேலும், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்துவதை கைவிட வலியுறுத்தி, வருகிற பிப்ரவரி 5-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள், கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது, நல்லம்பள்ளி அருகே சிவாடியில், விவசாயிகளை பாதிப்புக்குள்ளாக்கும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் பெட்ரோலியக் கிடங்கு அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அதியமான்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வருகிற ரயில்வே மேம்பாலப் பணிகள் காலதாமதம் ஆவதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, ரயில்வே மேம்பாலப் பணியைத் துரிதப்படுத்த ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற ஜனவரி 30 தருமபுரியில் நடைபெறவுள்ள மனிதச் சங்கிலியில் பெருமளவில் பங்கேற்பது, பிப்.2 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கையெழுத்து இயக்கத்தை மாவட்டம் முழுவதும் விரிவாக மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com