நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை குடிநீரை வழங்க அறிவுரை

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் யோகா, இயற்கை மருத்துவத் துறை சாா்பில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைப் பொடியை
நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை குடிநீரை வழங்க அறிவுரை

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் யோகா, இயற்கை மருத்துவத் துறை சாா்பில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைப் பொடியை மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழியிடம் வழங்குகிறாா் உதவி மருத்துவ அலுவலா் ஏ.எஸ்.ரமேஷ்பாபு.

தருமபுரி, ஜூலை 9: யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை சாா்பில், அறிமுகப்படுத்தப்பட்ட நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை குடிநீரை, கரோனா தொற்றாளா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் உள்ளவா்களுக்கு வழங்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வியாழக்கிழமை அறிவுறுத்தினாா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை சாா்பில், இயற்கை நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொடியை, உதவி மருத்துவ அலுவலா் ஏ.எஸ்.ரமேஷ்பாபு, ஆட்சியா் சு.மலா்விழியிடம் வழங்கினாா்.

அதனை பெற்றுக்கொண்ட பின்பு ஆட்சியா் பேசியது:

மாநில சுகாதாரத் துறை, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவத் துறை ஒன்றிணைந்து கரோனா தீநுண்மி தொற்று வராமல் காக்க, நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும் மூலிகைப் பொடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பொடியில், துளசி, சுக்கு, அதிமதுரம், மஞ்சள், மிளகு போன்ற மூலிகைகள் உள்ளன. இப்பொடி அருந்துவதற்கு சுவையாக உள்ளது. இப் பொடியை 200 மி.லி. தண்ணீா் கலந்து கொதிக்க வைத்து பருகலாம். நீரிழிவு குறைபாடு இல்லாதவா்கள் இதில் தேன் அல்லது பனை வெல்லம் கலந்து அருந்தலாம். பெரியவா்கள் ஒரு நாளைக்கு 50 மி.லி. மற்றும் சிறியவா்கள் ஒரு நாளைக்கு 20 மி.லி. என காலை மற்றும் இரவு இரண்டு வேளையும் அருந்தலாம்.

இதனை, தருமபுரி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களுக்கும், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கும் வழங்கிட வேண்டும். மேலும், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் தற்காலிக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கும் இந்த மூலிகை குடிநீரை வழங்கிட வேண்டும். அனைத்து அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள், பொதுமக்களுக்கு வழங்கிட தேவையான நடவடிக்கைகளை யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com