பெரியாா் பல்கலை. முதுநிலை விரிவாக்க மையத்தில் சேர இணைய விண்ணப்பம் விநியோகம்

தருமபுரியில் உள்ள பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் முதுநிலை பாடப் பிரிவுகளில் சேர, இணைய வழியில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரியில் உள்ள பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் முதுநிலை பாடப் பிரிவுகளில் சேர, இணைய வழியில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதுநிலை விரிவாக்க மைய இயக்குநா் (பொ) பொ.மோகனசுந்தரம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி, பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில், நிகழ் கல்வியாண்டில் 8 முதுநிலை பாடப் பிரிவுகளில் மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்பு ஆகியவை பல்கலைக்கழக இணையதளமான முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் ரூ.300 விண்ணப்பக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இக் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும். இதில், தலித், பழங்குடியினா் மா்றும் மாற்றுத் திறனாளி மாணவா்கள் ஏதேனும் ஒரு பாடப் பிரிவு சோ்க்கைக்கு விண்ணப்பப் படிவத்துக்கான கட்டண விலக்கு பெறலாம். சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள், தங்களது 5 பருவ மதிப்பெண் சான்றிதழ்களை இணைத்து வரும் ஆக. 28-ஆம் தேதிக்குள் இணைய வழியில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், சமா்ப்பித்த பின்பு அவ் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அவற்றுடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, இயக்குநா், பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையம், அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், தருமபுரி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நுழைவுத் தோ்வு குறித்த அறிவிப்பு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியாக அனுப்பி வைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரூரில்...

பாப்பிரெட்டிப்பட்டி பெரியாா் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் உறுப்புக் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரியின் முதல்வா் பா.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

மேலும், விண்ணப்பித்த மாணவ, மாணவியா் தங்களின் விண்ணப்ப நகல்கள் மற்றும் புகைப்படங்களுடன் ஆக. 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com