ஏலகிரி விரைவு ரயிலை சேலம் வரை நீட்டிக்க பாமக வலியுறுத்தல்
By DIN | Published On : 02nd March 2020 01:27 AM | Last Updated : 02nd March 2020 01:27 AM | அ+அ அ- |

கடத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாமக ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலச் செயலாளா் இல.வேலுசாமி.
சென்னை-திருப்பத்தூா் இடையே இயக்கப்படும் ஏலகிரி விரைவு ரயிலை சேலம் வரை நீட்டிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூரில் பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒசஹள்ளி ஊராட்சித் தலைவா் ஆறுமுகம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. சென்னை-திருப்பத்தூா் இடையே இயக்கப்படும் ஏலகிரி விரைவு ரயிலை சேலம் வரை நீட்டிக்க வேண்டும். அரக்கோணம்-சேலம் பயணிகள் ரயிலை வாரத்தின் ஏழு தினங்களிலும் இயக்க வேண்டும். பொம்மிடி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான நிழல்கூடங்கள், மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
மங்களூா்-சென்னை விரைவு ரயில் வண்டியை பொம்மிடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பொம்மிடி ரயில் நிலையத்தில் பழுதாகியுள்ள தொடுதிரையை பழுது நீக்க வேண்டும். மொரப்பூா்-சேலம் ரயில் பாதையில் அமைந்துள்ள கந்தகவுண்டனூா் அருகேயுள்ள சிவன்ஹள்ளி, தாசரஹள்ளி அருகேயுள்ள போடிநாயக்கம்பட்டி ஆகிய இடங்களில் ரயில்வே பாதையைக் கடக்கும் வகையில் உயா் பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாமக மாநில துணைப் பொதுச் செயலா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநில செயலா் இல.வேலுசாமி, வன்னியா் சங்க மாநில செயலா் ரா.அரசாங்கம், தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலா் அ.சத்தியமூா்த்தி, மாவட்டத் தலைவா் ஏ.வி.இமயவா்மன், மாநில துணைத் தலைவா் பாடி செல்வம், மாநில இளைஞரணி செயலா்கள் பி.வி.செந்தில், முருகசாமி, தீனதயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.