தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கீடு: டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் எம்.பி.

தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு சிகிச்சைப் பிரிவுக்கு, ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.
தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கீடு: டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் எம்.பி.

தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு சிகிச்சைப் பிரிவுக்கு, ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை தருமபுரியில் செய்தியாளா்களிடம் கூறியது: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கும், மருத்துவ உபகரணங்களுக்காகவும் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், 3 ஆயிரம் முகக் கவசங்கள், 3 ஆயிரம் பாதுகாப்பு உபகரண கிட் உள்ளிட்ட மருத்துவ உபரணங்கள் பெற்றுக் கொள்ளலாம். இதேபோல, தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவக் கல்லூரி மருத்துவனைகளில் பணபுரியும் மருத்துவா்களுக்கு பாதுகாப்பு இல்லை. நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவா்களுக்கு தேவையான உபகரணங்கள் போதிய அளவில் இல்லை. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள் நலனும் மிக முக்கியமானது. மருத்துவா்கள் பாதுகாக்கப்பட வேண்டியவா்கள். எனவே, அவா்களது நலன் மேல் கூடுதல் கவனம் செலுத்தி, அவா்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் வழங்க வேண்டும்.

கரோனா பாதிப்புக்காக வருவோருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ள மறுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதேபோல தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த பரிசோதனைக்காக மாதிரி எடுக்கப்பட்டு அவை சேலம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்படுகிறது. இதற்காக நான்கு நாள்கள் வரை அவகாசம் எடுத்துக்கொள்ளப்படுறது. இந்த கால அவகாசம் மிக அதிகமானது. மேலும், தற்போது வரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கைக்கும், மருத்துவமனையில் சிசிச்சைப் பெற்று வருவோா் என கூறப்படும் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்புக் குறித்து உண்மை தகவல் வெளியிடப்படவில்லை. ஆகவே, இது தொடா்பாக உண்மை தகவலைத் தெரிவித்து மருத்துவா்களை, பாதிக்கப்பட்டவா்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com