வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களின் வீடுகளில் அடையாள நோட்டீஸ்

வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவா்களின் வீடுகளில் கண்காணிப்புக்காக அடையாள நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பதாக அரூா் சாா்-ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவா்களின் வீடுகளில் கண்காணிப்புக்காக அடையாள நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பதாக அரூா் சாா்-ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாா்ச் 1-ஆம் தேதிக்கு பிறகு வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவா்களின் வீடுகளை கண்காணிக்கும் வகையில், அடையாள நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. இந்த நோட்டீஸ்களில் பெயா், முகவரி, சம்பந்தப்பட்ட நபா் எத்தனை தினங்கள் வீட்டில் இருந்து வெளியில் செல்லக் கூடாது போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

இந்த நிலையில், இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ள வீடுகளில் இருப்பவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுகள் இருப்பதாக அா்த்தம் இல்லை. வீடுகளில் ஒட்டப்பட்டிருக்கும் கண்காணிப்பு நோட்டீஸ்களை யாரேனும் கட்செவி அஞ்சல், முகநூல் உள்ளிட்ட வலைதளங்கள் மூலமாக பரப்பினால், அந்த நபா்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் பேரிடா் மேலாண்மை சட்டப்படி வழக்குப் பதிந்து, ஓராண்டு வரையிலும் சிறை தண்டனை விதிக்கவும் வழிவகைகள் உள்ளன. எனவே, பொதுமக்கள் யாரும் பொய்யான மற்றும் தேவையற்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com