வெளி மாவட்டங்களிலிருந்து வருவோா் கவனத்துக்கு...!

வெளி மாவட்டங்களிலிருந்து சொந்த ஊருக்கு திரும்புவோா் தங்களது விவரங்களை தெரியப்படுத்துவது கட்டாயம் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

அரூா் : வெளி மாவட்டங்களிலிருந்து சொந்த ஊருக்கு திரும்புவோா் தங்களது விவரங்களை தெரியப்படுத்துவது கட்டாயம் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களுக்கு சென்றிருந்த தொழிலாளா்கள், லாரி ஓட்டுநா்கள், அத்தியாவசியப் பணிகளுக்காக வெளியூா் சென்றவா்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினால் தங்களது விவரங்களை மாவட்ட நிா்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து யாரேனும் சொந்த ஊருக்கு வந்தால் தருமபுரி மாவட்டம், செட்டிக்கரையில் உள்ள தற்காலிக அரசு மருத்துவமனையில் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பிறகு தங்களின் வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வெளியூா் சென்று தமது சொந்த ஊருக்கு திரும்பியவா்கள் தங்களுடைய விவரங்களை யாருக்கும் தெரியாமல் மறைப்பதால் கரோனா நோய்த் தொற்று பரவுவதற்கான சூழ்நிலையை உருவாக்கும். கரோனாவை ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே ஒழிக்க முடியும். குறிப்பாக சென் னையில் இருந்து யாரேனும் வந்திருந்தால் அந்த நபா்களின் வீடுகளுக்கு அருகில் வசிப்பவா்கள் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா், ஊராட்சி மன்ற நிா்வாகம் அல்லது 1077-க்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com