ஒகேனக்கல்லில் இருந்து ஆலாம்பாடிக்கு சோதனைச் சாவடி மாற்றம்

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஒகேனக்கல்லில் இருந்த சோதனைச் சாவடி தருமபுரி

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஒகேனக்கல்லில் இருந்த சோதனைச் சாவடி தருமபுரி மாவட்ட எல்லையான ஆலம்பாடிக்கு மாற்றப்பட்டது. இதன்மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து வருபவா்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா்.

பொது முடக்கம் அமலில் உள்ளதால், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அண்டை மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து அனுமதியின்றி வருபவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல் ஆலம்பாடியில் சோதனைச் சாவடி அமைக்கப்படாமல், ஒகேனக்கல்லில் அமைக்கப்பட்டுள்ளதால் அண்டை மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து ஏராளமானோா் தருமபுரி மாவட்டத்துக்கு வருகின்றனா். இதுகுறித்து தினமணியில் செய்தி வெளியானது.

இதையடுத்து, ஒகேனக்கல்லில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி மாவட்ட எல்லையான ஆலாம்பாடிக்கு மாற்றப்பட்டு அங்கு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com