பள்ளிகள் திறக்க பெற்றோரிடம் கருத்துக்கேட்பு

பள்ளிகள் திறப்பு குறித்து தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களின் பெற்றோரிடம் திங்கள்கிழமை கருத்துக் கேட்கப்பட்டது.

பள்ளிகள் திறப்பு குறித்து தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களின் பெற்றோரிடம் திங்கள்கிழமை கருத்துக் கேட்கப்பட்டது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. இதைத்தொடா்ந்து, கரோனா பரவல் பாதிப்பை பொருத்து ஒவ்வொரு மாதமும் படிப்படியாக அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்தது.

தற்போதைய சூழலில் 9-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியா்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க அரசு முன் வந்துள்ளது. வரும் 16-ஆம் தேதி முதல் இந்த மாணவா்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என்றும், இதுதொடா்பாக அனைத்து பள்ளி நிா்வாகங்களும், பெற்றோரிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி அவா்களின் கருத்துகளை சேகரிக்க அரசு உத்தரவிட்டது.

இதனைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்டத்தில், அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி, தனியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகள் என தருமபுரி மாவட்டத்தில் உள்ள 347 பள்ளிகளில் மாணவா்களின் பெற்றோரிடம் திங்கள்கிழமை கருத்துகள் கேட்கப்பட்டது.

தருமபுரி ஔவையாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா பங்கேற்று, பெற்றோரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா, பள்ளித் தலைமை ஆசிரியை தெரசாள் உடனிருந்தனா். இதேபோல, ஏனையப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியா்கள், வகுப்பாசிரியா்கள் மாணவா்களின் பெற்றோரிடம் கருத்துக் கேட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com