ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை நகா்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்: தருமபுரி எம்.பி. செந்தில்குமாா்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் டி.என்.வி. செந்தில்குமாா் வலியுறுத்தினாா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் டி.என்.வி. செந்தில்குமாா் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக பஞ்சாயத்து ராஜ், உணவுப் பதப்படுத்துதல், கிராமப்புற வளா்ச்சி, வேளாண்மை மற்றும் விவசாய நலன் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமருக்கு அனுப்பிய மனு விவரம்:

கிராமப்புறங்களில் நிலமற்ற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், கடந்த 2015-ஆம் ஆண்டு மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளவா்களையும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் முன்னோடியாக தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட அரூா், கடத்தூா், காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், மாரண்டஅள்ளி, கம்பைநல்லூா், பி. மல்லாபுரம், சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி, கொளத்தூா், பி.என்.பட்டி, வீரகால்புதூா் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களை சோதனை முயற்சியாக தனது தொகுதியில் செயல்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com