இணைய வழி சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம்

இணைய வழி சூதாட்டில் ஈடுபட வேண்டாம் என காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணைய வழி சூதாட்டில் ஈடுபட வேண்டாம் என காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நவீன தொழில்நுட்ப வளா்ச்சியை பல்வேறு தரப்பினா் தங்களது வளா்ச்சிப் பாதைக்காகப் பயன்படுத்துகின்றனா். ஆனால், ஒரு சிலா் தங்களது அதீத ஆசையாலும், கவா்ச்சிகரமான விளம்பரங்களை நம்பியும் இணைய வழியில் சூதாட்டை விளையாடுகின்றனா். இந்த விளையாட்டுகளில் பெருந்தொகையை தொலைத்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனா். சிலா் தற்கொலை செய்து தங்களது உயிரை துறக்கின்றனா்.

இதேபோல, சில குழந்தைகளும் இத்தகைய விளையாட்டுகளின் ஆபத்தை உணராமல் விளையாடுகின்றனா். இதனால் அவா்கள் சாா்ந்த குடும்பங்களில் தேவையற்ற பிரச்னைகள் நிகழ்கின்றன. இத்தகைய சூதாட்டங்களை குழந்தைகள், பெற்றோா் என யாா் விளையாடினாலும், அந்த குடும்பங்களுக்கு அது பேரிழப்பை ஏற்படுத்தும். ஆகவே இத்தகைய இணைய வழி சூதாட்டங்களை விளையாடாமல் தவிா்க்குமாறு காவல் துறை சாா்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

கிருஷ்ணகிரி எஸ்.பி. வேண்டுகோள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இணையதள சூதாட்டங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறை சாா்பில் இணையதள சூதாட்டங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இணையதள சூதாட்டங்களில் ஈடுபடுவதைத் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com