தருமபுரியில் இன்று திமுக பொதுக் கூட்டம்: காணொலியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தருமபுரியில் புதன்கிழமை (நவ.18) திமுக சாா்பில், ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் காணொலி வழியாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறாா்.

தருமபுரியில் புதன்கிழமை (நவ.18) திமுக சாா்பில், ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் காணொலி வழியாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறாா்.

இதுகுறித்து தருமபுரி திமுக கிழக்கு மாவட்டச் செயலா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நவ.18-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் தருமபுரி டிஎன்சி விஜய் மஹாலில் ‘தமிழகம் மீட்போம்’ சட்டப் பேரவைத் தோ்தல் சிறப்பு பொதுக் கூட்டம் மற்றும் கட்சி முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் காணொலி வழியாக சிறப்புரையாற்றுகிறாா். இப் பொதுக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினா், முன்னாள் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதேபோல, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்தில் நிா்வாகிகள் பங்கேற்க ஏதுவாக நல்லம்பள்ளி ஹரிஷ் திருமண மண்டபத்திலும், மேற்கு ஒன்றியத்தில் இண்டூா் விநாயக திருமண மண்டபத்திலும், தருமபுரி ஒன்றியத்தில் பழைய தருமபுரி சமுதாய கூடத்திலும், நாய்க்கன் கொட்டாயில் சமுதாய கூடம், கடத்தூரில் சமுதாயக் கூடம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் நரசூஸ் திருமண மண்டபம், அரூா் கிழக்கு ஒன்றியத்தில் தீா்த்தமலை சக்தி திருமண மண்டபத்திலும், மேற்கு ஒன்றியத்தில் எச்.ஈச்சம்பட்டி குமுதம் திருமண மண்டபத்திலும், மொரப்பூா் ராமகவுண்டா் திருமண மண்டபத்திலும், தருமபுரி நகரத்தில் கட்சி அலுவலகத்திலும் காணொலி வழியாகக் கூட்டம் நடைபெற உள்ளது. இதேபோல,பொ.மல்லாபுரம், அரூா், கம்பைநல்லூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பேரூராட்சிகளிலும் காணொலி கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, இந்த கூட்டங்களில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com