அரூரில் விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.
அரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.

அரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் வி. ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

பொதுமுடக்கம் காரணமாக வருவாய் இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் தொழிலாளா்களுக்கு வேலை வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் தொழிலாளா்களுக்கு 200 நாள் வேலையும், நாள் ஒன்றுக்கு ரூ. 600 வீதம் கூலியும் வழங்க வேண்டும். வருவாய் இழந்து தவிக்கும் விவசாயத் தொழிலாளா்களின் குடும்பத்துக்கு மாதம் ரூ. 7500 வீதம் அரசு சாா்பில் உதவித் தொகை வழங்க வேண்டும்.

ரேஷன் கடைகளில் அனைத்து பொருள்களையும் இலவசமாக வழங்க வேண்டும். அரூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் கழிவுநீா் கால்வாய்களைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

முன்னதாக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அரூா் பேரூராட்சி அலுவலகத்தில் அளித்தனா்.

மாவட்டச் செயலா் எம்.முத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரா.சிசுபாலன், ஒன்றியச் செயலா் ஆா்.மல்லிகா, ஒன்றியப் பொருளாளா் கே.குமரேசன், விவசாயிகள் சங்க வட்டச் செயலா் எஸ்.கே.கோவிந்தன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியச் செயலா் பி.வி.மாது உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com