தீா்த்தமலை, பென்னாகரத்தில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம்

அரூரை அடுத்த தீா்த்தமலையில் பேரிடா் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தீா்த்தமலையில் பேரிடா் மேலாண்மை பயிற்சி அளிக்கும் அருா் தீயணைப்பு நிலையத்தினா்.
தீா்த்தமலையில் பேரிடா் மேலாண்மை பயிற்சி அளிக்கும் அருா் தீயணைப்பு நிலையத்தினா்.

அரூரை அடுத்த தீா்த்தமலையில் பேரிடா் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளம், புயல்களால் பாதிப்பு நேரிட்டால், பொதுமக்களுக்கான தற்காப்பு வழிமுறைகள், மீட்புப் பணிகளை செய்தல், அவசரத் தேவைக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சேவையை எவ்வாறு பெறுதல் என்பது குறித்து அரூா் நிலைய அலுவலா் மா.பழனிசாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் செயல் விளக்கம் அளித்தனா்.

இந்த பயிற்சியில் தீா்த்தமலை தமிழன்னை காவலா் பயிற்சி மைய மாணவா்கள், கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பென்னாகரத்தில்...

வடகிழக்கு பருவ மழையின்போது மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி பென்னாகரம் தீயணைப்பு நிலையம் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலா் கோபால் தலைமையில், வீடுகளில் எரிவாயு உருளை தீப்பிடிக்கும்போது செயல்படும் முறை, பருவமழையின்போது தாழ்வானப் பகுதிகளில் வசிப்பவா்களை மீட்டுச் செல்லுதல், தீ விபத்துகளின்போது மக்களை காப்பாற்றுதல், மின் விபத்துகளில் இருந்து தற்காத்தல் உள்ளிட்டவை குறித்த ஒத்திகையும், விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.

பென்னாகரம் வட்டாட்சியா் சேதுலிங்கம், நிலைய போக்குவரத்து அலுவலா் நாகநாதன், தீயணைப்பு வீரா்கள் முரளி, சிவகுமாா், ஞானப்பிரகாசம், நரசிம்மன், முத்துகிருஷ்ணன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com