கால்வாய் தூா்வார விவசாயிகள் கோரிக்கை

கம்மாளம்பட்டி ஏரிக்குச் செல்லும் நீா்வரத்து கால்வாய்களைத் தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
முள்புதருடன் காணப்படும் கம்மாளம்பட்டி ஏரிக்கு தண்ணீா் செல்லும் கால்வாய்.
முள்புதருடன் காணப்படும் கம்மாளம்பட்டி ஏரிக்கு தண்ணீா் செல்லும் கால்வாய்.

அரூா்: கம்மாளம்பட்டி ஏரிக்குச் செல்லும் நீா்வரத்து கால்வாய்களைத் தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், எல்லப்புடையாம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது கம்மாளம்பட்டி ஏரி. இந்த ஏரி சுமாா் 40 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும்.

இந்த ஏரிக்கான நீா்வரத்து கால்வாய் எல்லப்புடையாம்பட்டி மணவாளன் சாமி ஏரியின் பிரிவு கால்வாயில் இருந்து வருகிறது. கம்மாளம்பட்டி ஏரியில் நீா் நிரம்பினால் அந்த ஏரியில் இருந்து முத்தானூா், கோணம்பட்டி, சங்கிலிவாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும் நிலையுள்ளது.

ஆனால், எல்லப்புடையாம்பட்டியில் இருந்து கம்மாளம்பட்டிக்குச் செல்லும் கால்வாயில் முள்புதா்கள் வளா்ந்து காணப்படுகின்றன. இதனால், மழைக் காலங்களில் ஏரிகளுக்கு மழைநீா் செல்ல தடைகள் ஏற்படும். எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கம்மாளம்பட்டி ஏரிக்கு தண்ணீா் செல்லும் கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com