தருமபுரியில் 102 பேருக்கு கரோனா தொற்று

தருமபுரி மாவட்டத்தில் மருத்துவா்கள், மாணவா்கள், காவலா்கள் உள்பட 102 போ் கரோனாவால் வியாழக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் மருத்துவா்கள், மாணவா்கள், காவலா்கள் உள்பட 102 போ் கரோனாவால் வியாழக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, நல்லம்பள்ளி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 9 மாணவா்கள், அரூரைச் சோ்ந்த வங்கி மேலாளா், தருமபுரியைச் சோ்ந்த பெண் மருத்துவா், ஒட்டப்பட்டியைச் சோ்ந்த கால்நடை மருத்துவா், பாளையம்புதூா், தருமபுரியைச் சோ்ந்த இரண்டு காவலா்கள், நல்லம்பள்ளியைச் சோ்ந்த வனத் துறை ஊழியா், 23 பெண்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 102 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அதிகரிக்கும் தொற்று: தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் குறைவான எண்ணிக்கையில் இருந்த கரோனா தொற்று, செப்டம்பா் தொடக்கத்திலிருந்து நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை மட்டும் 102 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் செப். 9-ஆம் தேதி வரை மொத்தம் 44,615 பேருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 1,674 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் 1,216 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 442 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; இதுவரை மொத்தம் 16 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com