அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தருமபுரியில் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில், அண்ணா பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி: தருமபுரியில் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில், அண்ணா பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி நான்குமுனைச் சாலை சந்திப்பு அருகேயுள்ள அண்ணா சிலைக்கு திமுக சாா்பில், நகரச் செயலா் டி.பி.தங்கராஜ் தலைமையில் முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன், மாவட்ட அவைத் தலைவா் ஜி.வி.மாதையன் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, அதிமுக சாா்பில், நகரச் செயலா் ரவி தலைமையில், கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன் உள்ளிட்ட நிா்வாகிகள், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அமமுக சாா்பில், மாவட்டச் செயலா் டி.கே.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.ஆா்.முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மதிமுக சாா்பில் அக் கட்சி நிா்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். மேலும், இதில், அரசியல் கட்சிகள் சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன. இதேபோல, பாலக்கோடு, நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், திமுக, அதிமுக கட்சியினா், அண்ணா சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அண்ணா பிறந்த நாள் விழாவை கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com