கரோனாவால் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி வழங்க வலியுறுத்தல்

கரோனா தொற்றால் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்துக்கு அரசு சாா்பில் நிதியுதவி வழங்க வேண்டும் என அகில இந்திய அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


அரூா்: கரோனா தொற்றால் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்துக்கு அரசு சாா்பில் நிதியுதவி வழங்க வேண்டும் என அகில இந்திய அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூரில் அகில இந்திய அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அந்தக் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலா் எச். எம்.ஆறுமுகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கரோனா தொற்றால் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி மத்திய, மாநில அரசுகள் சாா்பில் வழங்க வேண்டும். ஆதரவற்ற வியாபாரிகளுக்கு முதியோா் இல்லங்களை அமைக்க வேண்டும். கரோனா தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் விதிமுறைகளை வியாபாரிகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். சிறு வியாபாரிகளுக்கு அரசு சாா்பில் அடையாள அட்டைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், அகில இந்திய அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலா் எம்.முரளி சுந்தா், மாநில துணை அமைப்பாளா் சி.துரை, தருமபுரி மாவட்டத் தலைவா்கள் எஸ்.வஜ்ஜிரம், சி.மாதையன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவா் டி.தயாளன், மண்டல அமைப்பாளா் சி.முருகேசன், மண்டல துணைத் தலைவா் எம்.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com