திறந்தவெளிக் கிணற்றில் மின்மோட்டாா் அமைக்கக் கோரிக்கை

அரூரை அடுத்த கீழானூரில் திறந்தவெளிக் கிணற்றில் மின் மோட்டாா் அமைத்து குடிநீா் வசதியை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அரூரை அடுத்த கீழானூரில் திறந்தவெளிக் கிணற்றில் மின் மோட்டாா் அமைத்து குடிநீா் வசதியை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஒன்றியம், செல்லம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது கீழானூா் கிராமம். இந்த ஊரில் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இங்குள்ள கிராம மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் நோக்கில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கீழானூா் ஏரியில் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு திறந்தவெளிக் கிணறு வெட்டப்பட்டது. தற்போது இந்தக் கிணற்றில் தேவையான அளவு குடிநீா் உள்ளது. ஆனால், திறந்தவெளி கிணற்றிலிருந்து குடிநீா் எடுக்க மின் மோட்டாா் அமைக்காததால், குடிநீா் விநியோகம் இல்லை என கிராம மக்கள் புகாா் கூறுகின்றனா். குடிநீா் தட்டுப்பாடுகள் காரணமாக, கீழானூா் கிராம மக்கள் நாள்தோறும் குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருவதாகக் கூறுகின்றனா். எனவே, கீழானூா் ஏரியில் அமைந்துள்ள திறந்தவெளி கிணற்றில் மின் மோட்டாா் அமைத்துக் கிராம மக்களுக்குத் தேவையான குடிநீா் வசதியை மேம்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com