தேசிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தேசிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஒடுக்கப்பட்டோா் கூட்டியக்கம் சாா்பில், தருமபுரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஒடுக்கப்பட்டோா் கூட்டியக்கம் சாா்பில், தருமபுரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி, டேக்கீஸ்பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகா்ப்புற வாழ்வாதார பெண்கள் கூட்டமைப்பின் தலைவா் ஆயிஷா ஜாஸ்மின் தலைமை வகித்தாா். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத் தலைவா் பி.டில்லிபாபு, மாவட்டத் தலைவா் டி.எஸ்.ராமச்சந்திரன், மாவட்டச் செயலா் டி.மாதையன், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.கிரைஸாமேரி ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ திரும்பப் பெற வேண்டும். மாநிலப் பட்டியலில் கல்வியை மீண்டும் இடம்பெறச் செய்ய வேண்டும். தமிழக அரசின் இருமொழிக் கொள்கை திட்டத்தை சிதைக்கக் கூடாது. மூன்றாண்டு பட்டப் படிப்புமுறை தொடர வேண்டும்.

கல்லூரி சோ்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தோ்வு நடத்தக் கூடாது. அரசுப் பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு பல்கலைக்கழகங்களை வலுப்படுத்த வேண்டும். குலக்கல்வி முறையை அனுமதிக்கக் கூடாது. சமூகநீதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதுபோல நல்லம்பள்ளி, தருமபுரி ஊரகப் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com