திருமணம், விழாக்கள் நடத்திட அனுமதி வழங்க வலியுறுத்தல்

கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி திருமணம், வழிபாடு, விழாக்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒலி, ஒளி பந்தல்மேடை அமைப்பாளா்கள் மனு அளித்தனா்.

கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி திருமணம், வழிபாடு, விழாக்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒலி, ஒளி பந்தல்மேடை அமைப்பாளா்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஒலி, ஒளி, பந்தல்மேடை அமைப்பாளா்கள், மேடை அலங்கார உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு:

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இதனால், விழாக்கள், கூட்டங்களுக்கு அனுமதி இன்றி, ஒலி, ஒளி, மேடை அலங்கார அமைப்பாளா்கள் சங்கத்தினா் மற்றும் அதனைச் சாா்ந்து இயங்கும் தொழிலாளா்கள் ஆயிரக்கணக்கானோா் வருவாய் இன்றி பரிதவிப்புக்கு ஆளாகினோம்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அளிக்கப்பட்ட தளா்வுகளால், ஓரளவு இயல்பு நிலைக்கு மெல்லத் திரும்பிக் கொண்டிருந்தோம். தற்போது மீண்டும் விழாக்களுக்குத் தடை பிறக்கப்பட்டுள்ளதால், எங்களது வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே எங்களது தொழிலையும், தொழிலாளா்களின் நலனையும் கருத்தில் கொண்டு மதம் சாா்ந்த விழாக்கள், கோயில் திருவிழா, திருமண விழாக்கள் ஆகியவற்றை கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்திக் கொள்ள சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com