நலவாரிய உறுப்பினா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளா் நலத் துறை சாா்பில், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளா் நலத் துறை சாா்பில், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சாா்பில் கட்டுமானம், அமைப்புசாரா மற்றும் ஓட்டுநா் நலவாரியங்களின் உறுப்பினா்களாகப் பதிவு செய்துள்ள தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 4,472 உறுப்பினா்களுக்கு ரூ. 83.37 லட்சம் மதிப்பில் மாதாந்திர ஓய்வூதியம், இயற்கை மரண நிதியுதவி, கல்வி, திருமணம் உதவித்தொகைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கப்படவுள்ளன.

முதற்கட்டமாக 5 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறும் ஆணை, உதவித்தொகை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்களில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமை வகித்து, 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா். இதில், தருமபுரி மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் கே.பி. இந்தியா, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com