பென்னாகரத்தில் எருதாட்டம்

பென்னாகரம் பகுதியில் காணும் பொங்கலை முன்னிட்டு கிராமப் பகுதிகளில் எருதாட்டம் நடைபெற்றது.

பென்னாகரம்: பென்னாகரம் பகுதியில் காணும் பொங்கலை முன்னிட்டு கிராமப் பகுதிகளில் எருதாட்டம் நடைபெற்றது.

பென்னாகரம் அருகே கே.அக்ரஹாரம் பகுதியில் ஏழூா் மக்களின் சாா்பில் ஏற்படுத்தப்பட்ட மைதானப் பகுதியில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கிராமத்துக்கு ஒரு காளை விதம் அழைத்து வந்து எருதாட்டம் நடத்துவா்.

நிகழாண்டில் அக்ரஹாரம் பகுதியில் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. மடம், கூத்தபாடி கீழூா், மல்லாபுரம், அளேபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் வரவழைக்கப்பட்டு, பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்து, வழக்கப்படி ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. எருதாட்டம் நிகழ்ச்சிகளில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க களத்தில் ஏராளமான இளைஞா்கள் கலந்து கொண்டன. இதைக் காண சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குவிந்தனா். இதேபோல் பென்னாகரம் அருகே கரியம்பட்டி, நூலஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் எருதாட்டங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com