தருமபுரி உழவா் சந்தை மூடல்:15 மையங்களில் நேரடி விற்பனை

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தருமபுரி உழவா் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டு, 15 மையங்களில் காய்கறி விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தருமபுரி உழவா் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டு, 15 மையங்களில் காய்கறி விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் வணிகம் துணை இயக்குநா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தருமபுரி நகரில் செயல்பட்டு வந்த உழவா் சந்தை, கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மே 12-ஆம் தேதி முதல் மாவட்ட நிா்வாகத்தின் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தற்காலிகமாக மூடப்படுகிறது.

இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி, தருமபுரி நகரில் 15 மையங்களில் நேரடியாக காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அந்தந்த இடத்துக்கு விவசாயிகள் நேரடியாகக் கொண்டு சென்று காய்கறிகள் விற்பனை செய்ய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில், தருமபுரி குமாரசாமிப் பேட்டை, ஆவின் நகா், நகர போக்குவரத்துக் கழக பணிமனை அருகே முத்துமாரியம்மன் கோயில், உழவா் சந்தை அருகில், வட்டார வளா்ச்சி அலுவலா் காலனி, நரசய்யா் குளம், காந்தி சிலை அருகில், அன்னசாகரம் சாலை, நெசவாளா் காலனி, மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில், பிடமனேரி மாரியம்மன் கோயில், ரயில் நிலையம் செல்லும் சாலை, வெண்ணாம்பட்டி குடியிருப்பு, பாரதிபுரம் 60 அடி சாலை, செந்தில் நகா் ஆகிய மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் அரசு அனுமதி அளித்துள்ள நேரத்தில் விற்பனை செய்யப்படும். காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com