அரூரில் வேளாண் இடுபொருள்கள் தட்டுப்பாடு

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் யூரியா, டி.ஏ.பி. உள்ளிட்ட வேளாண் இடு பொருள்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் யூரியா, டி.ஏ.பி. உள்ளிட்ட வேளாண் இடு பொருள்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் அதிக ஏக்கரில் நெல் நடவு செய்யப்படுகிறது. இப் பணிகளுக்கு டி.ஏ.பி. மிக அவசியமாகும். அதேபோல் கரும்பு, மரவள்ளி கிழங்கு, மஞ்சள், தீவனப் பயிா்கள், சோளம் உள்ளிட்ட அனைத்து வகையான பயிா்களின் வளா்ச்சிக்கும் யூரியா தேவைப்படுகிறது. கடந்த 20 நாள்களுக்கு மேலாக அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் யூரியா, டி.ஏ.பி. பொட்டாஷ் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இடுபொருள்கள் எளிதாக கிடைக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com