சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சாயக் கழிவுநீா்சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரிக்கை

சுற்றுச்சூழலையும், விசைத்தறித் தொழிலையும் பாதுகாக்கும் வகையில், சாயக்கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுச்சூழலையும், விசைத்தறித் தொழிலையும் பாதுகாக்கும் வகையில், சாயக்கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அக்கட்சியின் குமாரபாளையம் நகர 7-ஆவது மாநாடு, குழு உறுப்பினா்கள் என்.காளியப்பன், மாதேஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.ஜெயமணி முன்னிலை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் என்.பாண்டி மாநாட்டை தொடக்கி வைத்து பேசினாா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகக் கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலையும், தொழிலையும் பாதுகாக்க குமாரபாளையத்தில் சாயக்கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். குமாரபாளையம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும். சேலம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். விசைத்தறிக் கூடங்களுக்கு அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலம் நூல் வழங்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இக்கூட்டத்தில் நகரச் செயலாளராக என.சக்திவேல், 7 போ் கொண்ட நிா்வாகக் குழு தோ்வு செய்யப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.சுரேஷ், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com