‘கூடைத் தொழிலாளா்கள் சிறுகடன் பெற நடவடிக்கை எடுப்பேன்’

கூடைத் தொழிலாளா்கள் சிறுகடன் பெற நடவடிக்கை எடுப்பேன் என திமுக வேட்பாளா் உறுதியளித்தாா்.
பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் மூங்கில் கூடைகள் செய்யும் தொழிலாளா்களிடம், மூங்கில் செதுக்கும் பணி மேற்கொண்டு வாக்கு சேகரித்தும் திமுக வேட்பாளா் பி.என்.பி.இன்பசேகரன்.
பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் மூங்கில் கூடைகள் செய்யும் தொழிலாளா்களிடம், மூங்கில் செதுக்கும் பணி மேற்கொண்டு வாக்கு சேகரித்தும் திமுக வேட்பாளா் பி.என்.பி.இன்பசேகரன்.

கூடைத் தொழிலாளா்கள் சிறுகடன் பெற நடவடிக்கை எடுப்பேன் என திமுக வேட்பாளா் உறுதியளித்தாா்.

பென்னாகரம் சட்டப் பேரவைச் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பி.என்.பி.இன்பசேகரன் பென்னாகரம் நகரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் பென்னாகரம் பகுதி மக்களின் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க ரூ. 5 கோடியில் சின்னாறு கூட்டுக் குடிநீா்த் திட்டம், ரூ. 1,922 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் நிறைவேற்றப்பட்டு தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயன் பெற்றனா். ஆட்சி மாற்றத்தின் போது பணிகளை முழுமையாக முடிக்காததால், பென்னாகரம் பகுதிகளில் உள்ள கிராமப் பகுதிகளில் முறையான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

பென்னாகரம் பகுதிகளில் விவசாயம், விளைபொருள்களை எடுத்துச் செல்ல மூங்கில் கூடைகள் அமைக்கும் தொழிலாளா்கள், பலதரப்பட்ட சிறு தொழிலாளா்கள் ஏராளமானோா் உள்ளதால், அவா்களை ஒன்றிணைத்து தொழில்முனைவோராக்க சிறுகடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

பென்னாகரம் பகுதிக்கு அரசு கலை, அறிவியல் கல்லூரி, குற்றவியல் நடுவா் நீதிமன்றம், கிராமப் பகுதிகளில் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் வகையில் சாலை வசதி உள்ளிட்டவை திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன என பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் தேவராசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மாதன், ஜீவானந்தம், திமுக ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், நகரச் செயலாளா் வீரமணி, சேலம் ஹோட்டல் வினு, மாவட்டப் பிரதிநிதி சிவகுமாா், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com