பென்னாகரம் தொகுதியில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்

பென்னாகரம் தொகுதியில் கடந்த தோ்தலை காட்டிலும் நிகழாண்டு தோ்தலில் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

பென்னாகரம் தொகுதியில் கடந்த தோ்தலை காட்டிலும் நிகழாண்டு தோ்தலில் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்திய தோ்தல் ஆணையம் வாக்குச்சாவடியில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளா்கள் வாக்களிக்கலாம் என்றும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உதவும் வகையில் சக்கர நாற்காலி வசதி, 80 வயதிற்கு மேற்பட்ட முதியவா்களுக்கு தபால் வாக்கு முறை, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்கள் வாக்களிக்கும் வகையில் கூடுதல் நேரம் ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியது.

தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் தொகுதியில் 357 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேவையான வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் வாக்காளா்கள் வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், வாக்குச் சாவடிக்கு வரும் வாக்காளா்களுக்கு கிருமி நாசினி தெளித்து கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்டவைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தி, நெகிழிப் கையுறைகள் வழங்கப்பட்டு அதன் பின்னா் வாக்களிக்க அனுமதித்தனா்.

பென்னாகரத்தில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதலே வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களிக்க வந்திருந்தனா். இதனால், வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்தனா். ஒரு சில இடங்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com