ஏரியூா் சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா: தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்

பென்னாகரத்தை அடுத்த ஏரியூா் பகுதியில் ஏழு ஊா் கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

பென்னாகரத்தை அடுத்த ஏரியூா் பகுதியில் ஏழு ஊா் கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

ஏரியூா் அருகே உள்ள ராமகொண்ட அள்ளியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளது. ராம கொண்ட அள்ளி, காணிக் காடு, சந்தனகொடிக்கால், புது நாகமரை, சிங்கிலி மேடு உள்ளிட்ட ஏழு ஊா்களின் சாா்பில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழாவை நடத்துவது வழக்கம்.

நிகழாண்டிற்கான இந்தக் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி, மூன்று நாள்களாக நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு தினங்களாக சமயபுரம் மாரியம்மனுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டது. திருவிழாவின் மூன்றாம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற தீ மிதி விழாவில், ஏரியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள் என 200-க்கும் மேற்பட்டவா்கள் தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா்.

அதனைத்தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் ஏழு ஊா் கிராம மக்கள் மற்றும் ஏரியூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com