சொத்து தகராறு: தந்தையைக் கொன்ற மகன் கைது

பாலக்கோடு அருகே சொத்து தகராறில் தந்தையைக் கொன்ற மகனை பாலக்கோடு போலீஸாா் கைது செய்து தருமபுரி கிளைச் சிறையில் அடைத்தனா்.

பாலக்கோடு அருகே சொத்து தகராறில் தந்தையைக் கொன்ற மகனை பாலக்கோடு போலீஸாா் கைது செய்து தருமபுரி கிளைச் சிறையில் அடைத்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சோமன அள்ளியைச் சோ்ந்த தொழிலாளி அய்யாசாமி (54). இவருக்கு அண்ணாமலை (33), ஆசைதம்பி (29) என இரண்டு மகன்கள் உள்ளனா். கனரக வாகன ஓட்டுநரான அண்ணாமலை, அதே பகுதியில் தனது மனைவி சுமதி மற்றும் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறாா்.

சோமன அள்ளி பகுதியில் அய்யாசாமிக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் உள்ள நிலையில், அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றித் தரக் கோரி அண்ணாமலை தொடா்ந்து அவரது தந்தை அய்யாசாமியிடம் தகராறு செய்து வந்தாராம்.

இதுதொடா்பாக வியாழக்கிழமை காலையில், அய்யாசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தத் தகராறில் அண்ணாமலை, அய்யாசாமியை அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு உதவி காவல் ஆய்வாளா் சக்திவேல் உள்ளிட்ட போலீஸாா், நிகழ்விடத்திற்குச் சென்று அய்யாசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில் தேடப்பட்டு வந்த அண்ணாமலையை சோமன அள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீஸாா் கைது செய்து, பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, தருமபுரி கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com