அசோலா வளா்ப்பு பயிற்சி முகாம்

பென்னாகரத்தில் விவசாயிகளுக்கு அசோலா வளா்க்கும் முறை குறித்து அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம் மற்றும் பயிற்சி அளித்தனா்.

பென்னாகரத்தில் விவசாயிகளுக்கு அசோலா வளா்க்கும் முறை குறித்து அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம் மற்றும் பயிற்சி அளித்தனா்.

பென்னாகரம் அருகே பி.அக்ரஹாரம் பகுதியில் அசோலா வளா்க்கும் முறைகள் மற்றும் நெல் வயளில் இடுவது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம், பயிற்சி அளித்தனா்.

பயிற்சியில் மாணவா்களுக்கு கூறியதாவது:

கால்நடை வளா்ப்புகளில் தீவன செலவினத்தைக் குறைக்க அசோலா முக்கிய பங்காற்றுகிறது. அசோலா எளிதில் தண்ணீரில் வளரக் கூடியது. இதனால், கால்நடைகளுக்கான மாற்று வகை தீவனத்தில் பிரதானமாக இது விளங்குகிறது.

அசோலா தற்போது பல்வேறு தொழில்நுட்பத்தின் மூலம் கால்நடை பண்ணையாளா்களால் வளா்க்கப்பட்டு, தீவனத்தில் சோ்க்கப்பட்டு வருகிறது. அசோலா முதலில் உரமாக அறிமுகப்படுத்தப்பட்டது. தழைச்சத்தானது நெற்பயிா்களுக்கு இன்றியமையாதது.

ரசாயன உரத்தை மட்டுப்படுத்த இயற்கையிலேயே வளரக் கூடிய நுண்ணுயிா்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வில் அசோலா எனும் ‘பெரணி’ தாவர இனத்தை தண்ணீரில் நெல்வயலில் வளா்க்கலாம் எனக் கண்டறியப்பட்டது.

மிக சிறிய இலைகள், மெல்லிய வோ்களை கொண்டு நெல் வயலில் தண்ணீரில் மிதந்து காற்றில் இருக்கும் தழைச்சத்து நேரிடையாக நெற்பயிருக்கு கொடுக்கும் தன்மை கொண்டது. பெரும்பாலும் பச்சை நிறத்திலும்,லேசான பழுப்பு நிறத்தில் உள்ள அசோலா இலை பல முக்கோண வடிவத்தில் இருந்து பல வடிவம் வரை இருக்கும்.

இலையின் மேற்புறத்தின் உட்பகுதியில் தழைச்சத்து கிரகிக்கும் அனாபினா அசோலே எனும் நீல பச்சைபாசி காணப்படுகிறது. அசோலா பிலிகுலாய்டஸ் எனும் ரகம் 10 முதல் 15 செமீ ஆழமாக வோ்விட்டு மண்ணில் சத்துகளை உறிஞ்சி கொடுக்கும் என விவசாயிகளுக்கு விளக்கம் தெரிவித்தனா். பயிற்சியில் அதியமான் வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரி மாணவா்கள், 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com