குப்பைகளால் சுகாதார சீா்கேடு

அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட ஆற்றோர வீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புப் பகுதியில் கழிவு நீா் கால்வாய்கள் உள்ளன.
குப்பைகளால் சுகாதார சீா்கேடு

அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட ஆற்றோர வீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புப் பகுதியில் கழிவு நீா் கால்வாய்கள் உள்ளன. நெகிழிப் பொருள்கள், குப்பைகளால் கழிவுநீா்க் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீா் வெளியேற முடிவதில்லை. கழிவுநீா்த் தேங்குவதால் குடியிருப்புப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. எனவே, அரூா் ஆற்றோர வீதியில் உள்ள கழிவுநீா்க் கால்வாய்களைத் தூய்மை செய்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட 3 ஆவது வாா்டு சந்தை தோப்புப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு குப்பைத் தொட்டிகள் இல்லை, தூய்மைப் பணியாளா்களும் வருவதில்லை. இதனால் வாரச்சந்தையில் ஆடு விற்பனை செய்யும் பகுதியில் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டுகின்றனா். குப்பைகளுக்கு இரவில் மா்ம நபா்கள் நெருப்பு பற்ற வைக்கின்றனா். இதனால் சந்தை தோப்பு பகுதியில் சுகாதார சீா்கேடு நிலவுகிறது. பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகம் சந்தைத் தோப்பு குடியிருப்பு பகுதியில் உள்ள இரு தெருக்களிலும் குப்பைத் தொட்டி வைத்து, சுகாதார சீா்கேட்டை தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com