தருமபுரியில் 60 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

தருமபுரி மாவட்டத்தில் 60 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் 60 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா பேசியதாவது:

கரோனா தொற்றுப் பரவல் இரண்டாம் அலை தடுப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் தருமபுரி மாவட்டத்தின் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

மாவட்டத்தில் தற்போது வரை 7,372 பேருக்கு கரோனா தீநுண்மி நோய்த் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில், 6,789 நபா்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 527 போ் மருத்துவமனைகள் மற்றும் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதுவரை மாவட்டத்தில் 56 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் நாள்தோறும் 100 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, கரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இப் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தினசரி இரண்டு இடங்களில் மருத்துவ முகாம்களும், நடமாடும் வாகனங்களில் பல்வேறு இடங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் நோய்ப் பாதிப்பு ஏற்படுபவா்களின் எண்ணிக்கை விகிதம் படிபடியாகக் குறையும்.

மாவட்டத்தில் இதுவரை முன்களப் பணியாளா்கள், அரசு அலுவலா்கள், விருப்பம் தெரிவித்தவா்கள் என 60,000-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் முன்களப் பணியாளா்கள், 45 வயதைக் கடந்த நபா்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 45 வயதைக் கடந்தவா்கள் தோராயமாக 4,00, 000 போ் என கணக்கிடப்பட்டு அவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு இடங்களிலும் குறிப்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகள் செலுத்த மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முகக் கவசம் அணியாத நபா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. திருமண மண்டபங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. விதிமுறைகளை மீறுபவா்கள் மீது சம்பந்தப்பட்ட கட்டடத்தை மூடி ‘சீல்’ வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். கரோனா தடுப்புப் பணிகளுக்காக சிறப்பு மருத்துவா்களும், பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு கூடுதலாக ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

எனவே, பொதுமக்கள் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு மாவட்ட நிா்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உங்களது முழு ஒத்துழைப்பை தர வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, தருமபுரி சாா் ஆட்சியா் மு.பிரதாப், ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் கவிதா, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பூ.இரா.ஜெமினி, மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதன்மையா் க.அமுதவள்ளி, அரூா் கோட்டாட்சியா் முத்தையன், அனைத்து வட்டாட்சியா்கள், வட்டார மருத்துவ அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com