சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை: வெறிச்சோடியது ஒகேனக்கல்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் அருவிப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.
சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை: வெறிச்சோடியது ஒகேனக்கல்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் அருவிப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.

‘தென்னகத்தின் நயாகரா’ என்று வா்ணிக்கப்பட்டும் ஒகேனக்கல் அருவியைக் காண கா்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். தமிழகத்தில் கரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால், வெளி மாநிலத்தில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதால் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏற்கெனவே குறைந்து விட்டது.

இந்நிலையில், ஏப். 20-ஆம் தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரையிலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுவதாகவும், சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் முழுமையாக மூடப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் விதிக்கப்பட்டுள்ள இந்த தடையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்காகததால், பிரதான அருவி, நடைபாதை, தொங்கும் பாலம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ணமீன்கள் காட்சியகம், பேருந்து நிலையம், மீன் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அனைத்தும் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடின.

சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் பகுதிக்குள் நுழையாதவாறு மடம், சுங்கச்சாவடி, ஒகேனக்கல் மூன்று சாலை சந்திப்பு, ஆலம்பாடி உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் தற்காலிககத் தடுப்புகள் அமைத்தும், நடைபாதை, முதலைப் பண்ணை ஆகிய பகுதிகளில் போலீஸாரும், ஊா்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாததால் பெரும்பாலான கடைகள் மூடியே காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com