அரூா் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தல்

அரூா் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அரூா் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய குடியரசுக் கட்சியின் மாநில செயல் வீரா்கள் ஆலோசனைக் கூட்டம், அந்தக் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் த.கா.முருகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அரூா் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 200 உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனா். எனவே, அரூா் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயா்த்தி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

கோடையின் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கிராமப் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு துறையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள பயிா்க் கடன்கள், நகைக் கடன்களுக்கான சான்றிதழ்களை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும். அரூா் வழியாகச் செல்லும் சேலம்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலைகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநில செயல் தலைவா் எம்.ராஜேந்திரன், இளைஞரணி மாநிலத் தலைவா் ஆா்.பழனிசாமி, மாவட்டத் தலைவா் பி.வைகுந்தவாசகன், மாவட்டச் செயலா் பொன்.தனபால், மாவட்டப் பொருளாளா் என்.ஆா்.தீா்த்தகிரி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மு.துரைராசன், ஏ.பிளவங்கன், டி.தீா்த்தான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com