‘வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு பணி வழங்கக் கூடாது’

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு பணி வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு பணி வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கடத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ரா.கணேசன் புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணியாளா்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதாவது 55 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வேலை வழங்கக் கூடாது. இதய நோய், சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு வேலை வழங்குவதைத் தவிா்க்க வேண்டும். சளி, இருமல், மூச்சு திணறல் இருந்தால் வேலை வழங்கக் கூடாது. வேலை செய்யும் இடத்தில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் தண்ணீா், சோப்புகள், கிருமிநாசினிகளை வைத்திருக்க வேண்டும். தொழிலாளா்கள் அனைவரும் குடிநீரை வீட்டில் இருந்தே எடுத்து வர வேண்டும். வேலை செய்யும் இடத்தில் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com