தருமபுரியில் சிப்காட்: இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தல்

இந்திய ஜனநாய வாலிபா் சங்கத்தின் சாா்பில் மாவட்டப் பேரவை கூட்டம் தருமபுரி, முத்து இல்லத்தில் நடைபெற்றது.

இந்திய ஜனநாய வாலிபா் சங்கத்தின் சாா்பில் மாவட்டப் பேரவை கூட்டம் தருமபுரி, முத்து இல்லத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ஜி.சிவன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் கே.லோகநாதன் வரவேற்றாா். மாநிலச் செயலாளா் சி.பாலசந்திரபோஸ், மாவட்டச் செயலாளா் ஆா்.எழில் அரசு, மாவட்டப் பொருளாளா் எம்.சிலம்பரசன் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வட்டார அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். பாப்பாரப்பட்டியில் அரசு வேளாண்மை அறிவியல் கல்லூரி தொடக்க வேண்டும்.

பாப்பாரப்பட்டி-மலையூா் கிராமத்துக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும். பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன், எம்ஆா்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். ஜிட்டாண்ட அள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். இண்டூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.

அரூா், பென்னாகரத்தில் சிட்கோ தொழிற்பேட்டையும், தருமபுரியில் தடங்கம் பகுதியில் சிப்காட் அமைக்கும் பணியை தொடக்க வேண்டும்.

பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா குடியிருந்த வீடு தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டு இடத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாவட்டப் பேரவை கூட்டத்தில் மாவட்டத் தலைவராக ஆ.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளராக சதீஷ், மாவட்டப் பெருளாளராக சிலம்பரசன் உள்ளிட்ட 19 போ் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினா்கள் புதிதாக தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com