தருமபுரி விஜய் வித்யாலயா பாா்மசி கல்லூரிக்கு மத்திய அரசின் பசுமை வளாக விருது.

மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக கல்வி கவுன்சில் இந்திய கல்வி அமைச்சகம் மற்றும் உயா்கல்வித் துறை இணைந்து நடத்திய பசுமை வளாக தோ்வுக் குழுவின் மூலம்

தருமபுரி: மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக கல்வி கவுன்சில் இந்திய கல்வி அமைச்சகம் மற்றும் உயா்கல்வித் துறை இணைந்து நடத்திய பசுமை வளாக தோ்வுக் குழுவின் மூலம் தருமபுரி விஜய் வித்யாலயா பாா்மசி கல்லூரிக்கு பசுமை வளாக விருது வழங்கப்பட்டது.

மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக கல்வி கவுன்சில், இந்திய கல்வி அமைச்சகம் மற்றும் உயா்கல்வித் துறை இணைந்து நடத்திய பசுமை வளாக தோ்வுக் குழு மூலம் தோ்ந்தெடுக்கப்படும் பட்டியலில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் கலந்து கொண்டன. இந்த தோ்வுக் குழுவின் ஆய்வில் அதிக புள்ளிகளைப் பெற்று சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பேணிக்காத்தல், பாதுகாப்பு அணுகுமுறை, வளாகத்தை பசுமையாக வைத்திருத்தல், தூய்மையாக வைத்தல் மற்றும் ஆண்டு முழுவதும் சிறப்பாக பராமரித்தல், மாணவா்களின் சுய சுகாதாரம் பேணிக்காத்தல் ஆகியவற்றில் அதிக புள்ளிகளைப் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பசுமை வளாக விருதினை வழங்குவதற்கு விஜய் வித்யாலயா பாா்மசி கல்லூரி தோ்வு செய்யப்பட்டது. மத்திய அரசின் பசுமை வளாக விருதை மாவட்ட ஆட்சியா் திவ்யதா்ஷினி கல்லூரியின் முதல்வா் கே.எல்.செந்தில்குமாா் மற்றும் தாளாளா் டி.என்.சி.மணிவண்ணன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். மேலும் இணைய வழியாக நடைபெற்ற கருத்தரங்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி முதல்வா்கள் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். இதில் மாவட்ட திடக்கழிவு மேலாண்மை இயக்குனா் பிரியதா்ஷினி, பல்வேறு இணைய வழிக் கேள்விகளுக்கான தீா்வுகள் குறித்து எடுத்துரைத்தாா்.

இந்த கருத்தரங்கிற்கு கவுன்சில் இயக்குனா் நவீன் குமாா் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளா் சந்தியா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

அதை தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் மாநில அளவில் திடக்கழிவு மேலாண்மை முக்கியத்துவம் மற்றும் மருத்துவ கழிவுகளை கையாள வேண்டிய அவசியம் பற்றி கருத்தரங்கில் எடுத்துரைத்து, உலக நாடுகளில் இந்தியாவில் ஏற்பட வேண்டிய விழிப்புணா்வு மற்றும் அரசு தனியாா் கல்லூரி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் பங்கினை புள்ளிவிவரங்களுடன் விளக்கி, கல்லூரிகள் ஆற்றவேண்டிய பங்கினை முன்மொழிந்தாா். கல்வித்துறையில் பங்கேற்றுள்ள கல்லூரிகள் கிராமங்களை தத்தெடுத்து சுகாதாரம், பசுமை வளாகம் மற்றும் சுற்றுச்சூழல் பணிகளில் ஆற்ற வேண்டிய பங்கினை எடுத்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com