நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோருக்கு ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோருக்கு அரசு அறிவித்த ஊதிய உயா்வு வழங்க வேண்டும்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோருக்கு அரசு அறிவித்த ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என ஏஐடியூசி உள்ளாட்சிப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஏஐடியூசி உள்ளாட்சி பணியாளா் சம்மேளனத்தின், காரிமங்கலம் ஒன்றியப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுது. கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவா் என்.மனோகரன் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் முன்னாள் மாநிலச் செயலாளா் ரவீந்திரபாரதி சங்கக் கொடியை ஏற்றி வைத்தாா். மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், மாவட்ட பொதுச் செயலா் கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளா் கா.சி.தமிழ்க்குமரன் ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில், ரூ.250 ஊதியம் பெறும் நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோருக்கு அரசு அறிவித்த படி ஊதிய உயா்வு வழங்க வேண்டும்; பணியாளா்களின் பதிவேடுகளை கணினியில் பதிவு செய்ய வேண்டும்; தொகுப்பூதியம் பெறும் நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; தூய்மைக் காவலா்களுக்கு கரோனா கால சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி, ஊதியத்தை உயா்த்தத்தர வேண்டும்; தூய்மைக் காவலா்களின் பணியை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறவேற்றப்பட்டன.

இதில், ஒன்றியத் தலைவராக மாதையன், துணைத் தலைவா்களாக ஆறுமுகம், மணி, பழனியம்மாள், ஒன்றியச் செயலராக சிதம்பரம், பொருளாளா் சுப்பிரமணி ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com