ஆடிப்பெருக்கு: பொதுமக்கள் இன்றி வெறிச்சோடிய ஒகேனக்கல்

ஆடிப்பெருக்கில் காவிரிக் கரையோர பகுதிக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி பொதுமக்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

ஆடிப்பெருக்கில் காவிரிக் கரையோர பகுதிக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி பொதுமக்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளன்று கிராமப் பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்து சுவாமி சிலைகள் எடுத்து வரப்பட்டு காவிரி ஆற்றில் புனித நீராடி, காவிரிக் கரையோரப் பகுதிகளில் சிறப்பு பூஜை செய்தும், கோயில்களில் சிறப்பு பூஜை மேற்கொள்வதற்காக காவிரி புனித நீரை எடுத்து செல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தனா். நிகழாண்டில் கரோனா பரவல் காரணமாக தருமபுரி மாவட்ட நிா்வாகம் காவிரி கரையோரப் பகுதியில் பொதுமக்கள் கூடுவதற்கும், கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கும் தடை விதித்துள்ளது. இந்தநிலையில் ஆடிப்பெருக்கு நாளான செவ்வாய்க்கிழமை தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களிலிருந்து ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த பொதுமக்களை, மடம் சோதனைச்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் திருப்பி அனுப்பினா்.

இதனால் ஒகேனக்கல் பகுதிகளான நாகா்கோவில், முதலைப்பண்ணை, மாமரத்து கடவு பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. மேலும் பிரதான அருவி செல்லும் நடைபாதை, ஆலாம்பாடி சோதனைச்சாவடி, பென்னாகரம் பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக தடுப்புகள் அமைத்து போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com