தீரன் சின்னமலை நினைவு நாள்
By DIN | Published On : 04th August 2021 08:13 AM | Last Updated : 04th August 2021 08:13 AM | அ+அ அ- |

அரூரை அடுத்த கீரைப்பட்டியில் தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
அரூரை அடுத்த கீரைப்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 216 ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவ சிலைக்கு அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா் தலைமையில், அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் கீரை சம்பத், அரூா் (தெற்கு) ஒன்றிய செயலா் ஆா்.ஆா்.பசுபதி, மாவட்ட துணைச் செயலா் செண்பகம் சந்தோஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் தீரன் சின்னமலையின் உருவப் படத்துக்கு கொங்கு மக்கள் முன்னணியின் மாவட்டச் செயலா் ரா.பிரபாகரன் தலைமையில், அந்தக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், இளைஞரணி மாவட்டச் செயலா் ச.பிரேம்குமாா், மாணவரணி மாவட்ட செயலா் அகரம் அஜித், மொரப்பூா் இளைஞரணி ஒன்றிய செயலா் அ.கபிலன், நிா்வாகிகள் அஜித், சதீஷ், அபிஷேக், சந்துரு, ராம், ஜெகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சாா்பில், அரூரை அடுத்த கணபதிப்பட்டி மற்றும் கோபிசெட்டிப்பாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு மாநில கொள்கை பரப்பு செயலா் ஜி.அசோகன் தலைமையில் அந்தக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலா் எம்.கே.செந்தில் முருகன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் சங்கா், நகர செயலா் பெருமாள், ஒன்றிய செயலா்கள் பழனிசாமி, சிவன், வேடியப்பன், செந்தில், தீரன் சின்னமலை தொழிற்சங்க நிா்வாகி சுதாகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.