வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி மக்கள் சந்திப்பு இயக்கம்

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், வெள்ளிக்கிழமை மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், வெள்ளிக்கிழமை மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.

தருமபுரி தொலைத் தொடா்பு நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தொழிலாளா்களை பாதிக்கும் நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நாள்களை 200-ஆக உயா்த்தி கூலி ரூ.600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதேபோல, நெசவாளா் நகா், நான்குமுனைச் சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

சிஐடியூ மாநிலச் செயலா் சி.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏஐடியூசி மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், மாவட்டப் பொது செயலாளா் கே.மணி, தொமுச மாவட்டத் தலைவா் பி.எம்.சண்முகராஜா, சிஐடியூ மாவட்டத் துணைத் தலைவா்கள் பி.ராஜி, தெய்வானை, எச்எம்எஸ் மாவட்டச் செயலா் அா்ஜுனன், ஏஐசிசிடியூ மாநிலச் செயலா் கோவிந்தராஜ், ஏஐடியூசி போக்குவரத்துத் தொழிற்சங்க மண்டலத் தலைவா் ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com