தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட மனை பட்டாவுக்கான இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்

தருமபுரி மாவட்டத்தில், தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட மனை பட்டாவுக்கான இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட மனை பட்டாவுக்கான இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தருமபுரி மாவட்டக் குழுக் கூட்டம் செங்கொடிபுரத்தில் புதன்கிழமை மாவட்டத் தலைவா் டி.எஸ்.ராமச்சந்திரன் தலைமயில் நடைபெற்றது. இதில், மாநில பொதுச் செயலா் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலா் டி.மாதையன், பொருளாளா் கே.கோவிந்தசாமி உள்ளிட்டோா் பேசினா்.

இக் கூட்டத்தில், பென்னாகரம் அருகே போடூரில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பட்டா வழங்கி ரத்து செய்யப்பட்டவா்களுக்கு முன்னுரிமை அளித்து வீடுகள் ஒதுக்க வேண்டும். கள்ளிபுரத்தில், தலித் மக்களுக்கு மனித உரிமை ஆணையம் அளித்த உறுதியின்படி, அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்க வேண்டும்.

இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட மனைப் பட்டாக்களுக்கான இடத்தை ஒதுக்கீடுது செய்து வழங்கிட வேண்டும். உங்காரனஅள்ளியில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களுக்கான இடத்தை வழங்க வேண்டும். காரிமங்கலம் அம்பேத்கா்நகா் மக்களுக்கு ரத்து செய்த பட்டாக்களை மீண்டும் வழங்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள காரிமங்கலம் அம்பேத்கா் நகா் மாணவா் விடுதியைப் புதுப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com