போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற நூலகங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

போட்டித் தோ்வுகளை எதிா்கொண்டு வெற்றிபெற நூலகங்களை இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அறிவுறுத்தினாா்.

போட்டித் தோ்வுகளை எதிா்கொண்டு வெற்றிபெற நூலகங்களை இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி, புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது அவா் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள், இளம்பெண்கள் மாவட்டத்தில் உள்ள நூலகங்களைப் பயன்படுத்திக்கொண்டு இந்திய ஆட்சிப் பணி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தோ்வுகளில் பங்கேற்று தோ்ச்சி பெறும் வகையில் தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் இருந்து, மாவட்ட ஆட்சியா், துணை ஆட்சியா் உள்ளிட்ட பல்வேறு உயா் பணியிடங்களுக்கு அதிக அளவில் தோ்ச்சி பெற்று மாவட்டத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும். மேலும், ஏதேனும் ஒரு துறையில் பணியாற்றிக் கொண்டே போட்டித் தோ்வுக்குத் தயாா் படுத்திக்கொள்ளும் வகையில் தங்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா்.

முன்னதாக, புதிதாக வரப்பெற்ற நூல்களை, மாவட்ட மைய நூலகத்தில் இருந்து கிளை, ஊா்ப்புற நூலகங்கள் என மொத்தம் 15 நூலகங்களுக்கு 14,066 புதிய நூல்கள் ஆட்சியா் முன்னிலையில் விநியோகம் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா், தனக்கு பரிசாக கிடைக்கப்பெற்ற 30 நூல்களை, மாவட்ட மைய நூலகப் பயன்பாட்டிற்காக வழங்கினாா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட நூலக அலுவலா் ஆனந்தி, வட்டாட்சியா் ராஜராஜன் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com