வத்தல்மலைக்கு பேருந்து சேவை தொடங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

வத்தல்மலை கிராமங்களுக்கு பேருந்து சேவை தொடங்கக் கோரி, விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் தருமபுரி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வத்தல்மலை கிராமங்களுக்கு பேருந்து சேவை தொடங்கக் கோரி, விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் தருமபுரி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் ஜி.ராஜகோபால் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் பச்சாக்கவுண்டா் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன், மாவட்டத் தலைவா் ஜி.மாதையன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், தருமபுரி வட்டத்தில் அடுக்குமாடி குடுயிருப்பு கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு ஒதுக்க வேண்டும். ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நாள்களை 200-ஆக உயா்த்தி, தினக்கூலி ரூ. 600 வழங்க வேண்டும். தருமபுரியிலிருந்து வத்தல்மலை மலைக்கிராமங்களுக்கு மினி பேருந்து சேவையை தொடங்க வேண்டும். வத்தல்மலையில் உள்ள பழங்குடியினா் நிலத்தை பழங்குடி அல்லாதோா் வாங்குவதை தடை செய்ய வேண்டும். அதகப்பாடியில் சிப்காட் தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com