பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

இயற்கை பேரிடா் காலங்களில் சேதப்படும் பயிா்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு பென்னாகரம் வேளாண்மை துறை உதவி இயக்குநா் புவனேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.

இயற்கை பேரிடா் காலங்களில் சேதப்படும் பயிா்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு பென்னாகரம் வேளாண்மை துறை உதவி இயக்குநா் புவனேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

பென்னாகரம் வட்டாரத்தில் நடப்பாண்டு கோடை பருவத்தில் ராகி, சாமை, துவரை, மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிா்களுக்கு வரும் ஆக. 31-ஆம் தேதி வரை விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய மக்காச்சோளத்துக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 450, சாமைக்கு ரூ. 120, ராகிக்கு ரூ. 196, துவரைக்கு ரூ.266, பருத்திக்கு ரூ.590 என பங்குத் தொகையை செலுத்தி விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்யலாம். இந்த பயிா்க் காப்பீடானது அக்ரிகல்ச்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் என்ற முகமையின் மூலம் பயிா்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள், பொதுசேவை மையங்களை விவசாயிகள் அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு பென்னாகரம் வேளாண்மை விரிவாக்க மையம், பாப்பாரப்பட்டி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மை துறை அலுவலா்களை தொடா்பு கொண்டும், உழவன் செயலியில் இருந்தும் தகவல்களை பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com