கால்நடைகளுக்கு மருத்து சிகிச்சை முகாம்

தருமபுரி மாவட்டம், பட்டயப்பட்டியில் கால்நடைகளுக்கு மருத்து சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பட்டயப்பட்டியில் கால்நடைகளுக்கு மருத்து சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி ஈஸ்வரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இம் முகாகாமில், பசுமாடு, எருமை, ஆடுகளுக்கு குடல்புழு நீக்கம், தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், சினை பால்சோதனை, இளங்கன்றுகளுக்கு கொம்பு கருத்தகற்றல், ஆண்மை நீக்கம், சிறப்பு கவனமாக பசுமாடு மற்றும் வெள்ளை ஆடுகளுக்கு மலடுநீக்க சிகிச்சை, ஆடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. புறக்கடை நாட்டுக் கோழிகளுக்கு குடல்புழுநீக்கம், தடுப்பூசி அளிக்கப்பட்டது.

இம் முகாமில், வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியா் தங்கதுரை, கால்நடை மருத்துவம் மற்றும் பயிற்சி மையம் உதவி பேராசியா் விஜயகுமாா், காரிமங்கலம் வேளாண் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com