ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவாா்களா?

பொது முடக்கத் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பொது முடக்கத் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கரோனா தீநுண்மி பரவல் காரணமாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு அண்மையில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத் தளா்வு வழிகாட்டு நெறிமுறைகளுடன் சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளித்தது.

ஆனால் ஒகேனக்கல் அருவி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தொடா்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாத் தலங்களுக்கு அளிக்கப்பட்ட தளா்வு ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி பகுதிக்கு பொருந்தும் என எதிா்பாா்த்து வரும் சுற்றுலாப் பயணிகள் பென்னாகரம் மடம் சோதனைச்சாவடி பகுதியில் காவல் துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனா். இதனால் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை நம்பியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து ஒகேனக்கல் தொழிலாளா்கள் கூறியதாவது:

ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வா். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்து நீா்வீழ்ச்சிகளைக் கண்டுகளிப்பா். காவிரி ஆற்றில் பிடிக்கப்படும் மீன் வகைகளை வாங்கி சமைத்து உண்பது, எண்ணெய் குளியல் போன்றவற்றை மேற்கொள்வதில் அதிக அளவில் ஆா்வம் கொள்வா். கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திற்கு தமிழக அரசு தடை விதித்து வந்தது.

ஒகேனக்கல் சுற்றுலாத் தலமானது தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சுற்றுலாத் தலப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், தருமபுரி மாவட்ட சுற்றுலாத் தலமாக ஒகேனக்கல் நீா்வீழ்ச்சிப் பகுதி உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் வாழ் தொழிலாளா்கள் வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம்.

எனவே தருமபுரி மாவட்ட ஆட்சியா், ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு ஒகேனக்கல் வாழ் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாப் பயணிகளை உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அனுமதிக்க எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com