திமுக மாணவரணிக்கு உறுப்பினா் சோ்க்கை
By DIN | Published On : 28th December 2021 12:00 AM | Last Updated : 28th December 2021 12:00 AM | அ+அ அ- |

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக மாணவரணிக்கு உறுப்பினா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தருமபுரி அரசு கலைக்கல்லூரி நுழைவு வாயில் அருகே நடைபெற்ற இந்த முகாமை, தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்ரமணி தொடங்கி வைத்தாா். மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், மாநில மாணவரணி துணை அமைப்பாளா் இரா.தமிழரசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் கே.பி.சக்திவேல் உள்ளிட்டோா் பேசினா்.
இந்த முகாமில், தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் நூற்றுக்கணக்கானோா் தங்களை, திமுக மாணவரணியில் உறுப்பினா்களாக இணைத்துக் கொண்டனா்.