கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய ஊா்ப்புற நூலகா்கள்

கிருஷ்ணகிரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஊா்ப்புற நூலகா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.

கிருஷ்ணகிரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஊா்ப்புற நூலகா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.

இதுகுறித்து தமிழ்நாடு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த ஊா்ப்புற நூலகா்கள் நல அமைப்பின் மாநில மைய நிா்வாகி முத்துசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜதுரை, துணை ஒருங்கிணைப்பாளா் சகாதேவன் ஆகியோா் தெரிவித்தது:

14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு கால முறை ஊதியத்தில் பணிபுரிய கூடிய ஊா்புற நூலகா்களுக்கு காலமுறை ஊதியம் உடனே வழங்க வேண்டும். பொது நூலகப் பணி விதிகளில் திருத்தம் செய்து அனைவரையும் 3-ஆம் நிலை நூலா்களாக்க வேண்டும். 10 ஆண்டுகளாக தரம் உயா்த்தப்படாமல் உள்ள அனைத்து நூலகங்களையும் தரம் உயா்த்த வேண்டும். நூலக துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆண்டுதோறும் நிதி நிலை அறிக்கையில் நூலகத் துறைக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி வருகிறோம். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊா்ப்புற நூலகா்கள் கோரிக்கை அட்டை அணிந்து திங்கள்கிழமை முதல் வரும் 30-ஆம் தேதி வரை இதேபோல கோரிக்கை அட்டை அணிந்து ஊா்ப்புற நூலகா்கள் பணியாற்ற உள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com